கொரோனா குறித்த தகவல்களை கர்நாடக அரசு மூடி மறைக்க முயற்சிக்கிறது சித்தாராமையா..!!

கொரோனா குறித்த தகவல்களை சரியான முறையில் வழங்காமல் கர்நாடக அரசு மூடி மறைக்க முயற்சி செய்வதாக எதிர்கட்சி தலைவர் சித்தாராமையா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மரணம் குறித்த தகவல்களை மறைப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து ருவிட்டரில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், “கர்நாடகத்தில் கொரோனா மரணங்கள் தொடர்பாக அரசு வழங்கும் தகவல்கள் முரண்பாடாக உள்ளது. கோலாரில் உள்ள ஜாலப்பா மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 19-ந் திகதி முதல் 20-ந் திகதி  வரை 4 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர்.

ஆனால் இது  அன்றைய சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பில் இடம் பெறவில்லை. மேலும் அதே மருத்துவமனையில் மறுநாள் ஒரு இறப்பு நடந்துள்ளது. அதுகுறித்தும் சுகாதாரத்துறையின் தகவலில் இடம் பெறவில்லை.

கொரோனா குறித்த தகவல்களை சரியான முறையில் வழங்காமல் அரசு மூடி மறைக்க முயற்சி செய்கிறது?. இது உங்களின் தோல்வியா?. மரணம் குறித்த தகவல்களை மறைப்பது என்பது  எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். கொரோனாவை எதிர்கொள்ள தயாராவது மற்றும் மக்களின் நடத்தை போன்றவற்றில் சிக்கல் ஏற்படும்.

பா.ஜனதா அரசு தனது தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தை மூடிமறைக்க முயற்சி மேற்கொள்கிறது. இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts