பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்கு சென்ற 23பொலிஸாருக்கு கொரோனா..!!

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு பணிக்கு சென்ற 23 பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை)  தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றிருந்தார். பிரதமரின் வருகை காரணமாக பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்…

மேலும்

கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 3,457பேர் பாதிப்பு..!!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் மூவாயிரத்து 457பேர் பாதிக்கப்பட்டதோடு, 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 31 ஆயிரத்து 999பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 110பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27ஆயிரத்து…

மேலும்

கருக்கலைப்பு சட்டம் தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிய போலந்து ஜனாதிபதி..!!

தீவிர போராட்டம் காரணமாக கருக்கலைப்பு சட்டம் தொடர்பான தனது நிலைப்பாட்டை, போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் துடா மாற்றியுள்ளார். கருவுற்றிருக்கும் கருவை கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு உரிமை இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் இத்தகைய செயல்களுக்கு சட்டம் தேவையாக இருக்க முடியாது என்று அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடான போலந்தில், கருவில் ஏற்படும் குறைபாடுகளைக் காரணம்…

மேலும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோ பிடன் வாக்களித்தார்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரது மனைவி ஜில் ஆகியோர், தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் தினத்திற்கு முன்னதாகவே அவர்கள் தங்களது வாக்குகளை வில்மிங்டனில் உள்ள வாக்குச் சாவடியில் பதிவுசெய்தனர். இதன்போது கருத்துதெரிவித்த அவர், ‘பிலடெல்பியாவில் கருப்பின இளைஞரை பொலிஸார் சுட்டுக்கொலை செய்த நிலையில் வெடித்த…

மேலும்

இந்தியா- அமெரிக்கா உட்பட 4 நாடுகளின் கடற்படை பயிற்சி ஆரம்பமாகும் நாள் அறிவிப்பு..!!

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும்  அவுஸ்ரேலியா ஆகிய 4 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் மலபார் கடற்பயிற்சி, எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட பயிற்சி எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை விசாகப்பட்டணத்தில் வங்காள விரிகுடா கடலில் நடைபெற இருக்கின்றது. இரண்டாம் கட்ட பயிற்சி நவம்பர் மாத…

மேலும்

இந்தியாவில் புதிதாக 48,268 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 81 இலட்சத்தை கடந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம்,  புதிதாக  48,268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81,37,119…

மேலும்

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் ´புளூ மூன்´ நிகழ்வு இன்று!

இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வரும் (நீல நிலா) ´புளூ மூன்´ நிகழ்வு இன்று(சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு மீண்டும் 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புளூ மூன் என்று கூறுவதால் நிலவின் நிறத்தில் பெரிய மாறுபாடு எதுவும் இருக்காது. இது முழுக்க முழுக்க பௌர்ணமியின் கால நேரத்தை பொறுத்தது…

மேலும்

கட்சியின் முடிவில் இருந்து விலகிய உறுப்பினர்களுக்கு எதிராக அடுத்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை..!!

அரசியலமைப்பின் 20 வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அடுத்த வாரம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பான சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன என்றும் அடுத்த கட்டமாக விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.…

மேலும்

தாய்வானில் கடந்த 200 நாட்களாக கொவிட்-19 பாதிப்பு பதிவாகவில்லை..!!

தாய்வானில் கடந்த 200 நாட்களாக, யாருக்கும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோயின் புதிய அலைகளைக் கட்டுப்படுத்த உலகின் பெரும்பகுதி போராடி வரும் நிலையில், இந்த செய்தி பாதிப்பினால் ஆட்டம் கண்டுவரும் நாடுகளை வியக்கவைத்துள்ளது. 23 மில்லியன் மக்கள் வசிக்கும் தீவு கடைசியாக ஏப்ரல் 12ஆம் திகதி நிலவரப்படி, 553…

மேலும்

வூகான் நகருக்கு பயணிக்கிறது ஏயார் இந்தியா விமானம்..!!

கொரோனா  நோய்தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட வூகான் நகருக்கு இந்தியா தனது விமான சேவையை இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கவுள்ளது. சீனாவின் உள்ள இந்திய தூதரக தகவல்படி இன்று முதல் டெல்லி- வூகான் விமான பாதையில் வந்தே மாதரம் மிஷன் (விபிஎன்) விமானம் இயக்கப்படும். அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லி-குவாங்சோ இடையேயான…

மேலும்