போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் மேலும் 3 நடிகர்கள்..!!

ஹிந்தி திரைப்பட உலகில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது 3  நடிகர்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தனது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விவகாரம் குறித்த விசாரணையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த தகவல் கிடைத்ததால் இதுகுறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர், ராகுல் பிரித்தி சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில்  ஹிந்தி நடிகர்கள் 3 பேரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்து விரைவில் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts