UPDATE சஜித் பிரேமதாச மீதான கல்வீச்சு தாக்குதல் – இருவருக்கும் விளக்கமறியல்..!!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிகழ்வின் போது கல்வீச்சு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேலும்

பாடசாலை விடுமுறை கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்..!!

அரச மற்றும் அரச அனுமதிப் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2020ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம்…

மேலும்

இலங்கை சிங்கள மக்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல கஜேந்திரகுமார்..!!

இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இலங்கை பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் தெரிவித்துள்ள அவர்,…

மேலும்

போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் கண்காணிப்பு வளையத்திற்குள் மேலும் 3 நடிகர்கள்..!!

ஹிந்தி திரைப்பட உலகில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், தற்போது 3  நடிகர்களை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தனது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பான விவகாரம் குறித்த விசாரணையில் போதைப் பொருள் பயன்பாடு குறித்த தகவல் கிடைத்ததால் இதுகுறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.…

மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பது கடன் பொறி அல்ல ஜனாதிபதி..!!

சீன நிதி உதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதை சிலர் ‘கடன் பொறி’ என்று அழைத்த போதிலும், அது பெரும் அபிவிருத்தி திறன் கொண்ட ஒரு திட்டமாகும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நான்கு தூதுவர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டபய…

மேலும்

நாட்டிற்குள் மீண்டும் ஒரு வன்முறை அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி..!!

நாட்டிற்குள் மீண்டும் ஒரு வன்முறை அரசியல் கலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிய நிகழ்வில் அடையாளம் தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது. அந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில்…

மேலும்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக சி.ஐ.டி.க்கு புதிய முறைப்பாடு..!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது  குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் (சி.ஐ.டி) முறைப்பாடொன்றை அளிக்க தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது. குறித்த முறைப்பாட்டை கத்தோலிக்க அமைப்பின்  தலைவர் சிரந்த அமரசிங்க இன்று (புதன்கிழமை) பிற்பகல் பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகபே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளதாக…

மேலும்

கொரோனா அச்சம் – மேலும் 339 பேர் நாடு திரும்பினர்..!!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 339 பேர் நாடு திரும்பியுள்ளனர். இதற்கமைய அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து 287 இலங்கையர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 47 இலங்கையர்களும் இந்தியாவின் மும்பை நகரில் இருந்து 5 இலங்கையர்களும் இன்று (பதன்கிழமை) அதிகாலை மத்தல விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். நாட்டை…

மேலும்

மீண்டும் வடக்கில் பழைய நிலைமை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் பிரதமர்..!!

நாட்டில் அசாதாரன நிலை ஏற்படும் வகையில் மீண்டும் வடக்கில் அவ்வாறானதொரு நிலை ஏற்படின் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட பதிலே பதிலாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திலீபனின் நினைவேந்தலுக்கு அனுமதிக்க கோரி வடக்கில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையை அரசாங்கம் எவ்வாறு…

மேலும்

சஹ்ரான் சுதந்திரமாக உலாவியதற்கு பொலிஸாரின் அலட்சியமே காரணம் முன்னாள் பொலிஸ் மா அதிபர்..!!

பொலிஸாரின் அலட்சியமே பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக உலாவியதற்கு காரணமென என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிபோது, ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். View Post…

மேலும்