மட்டக்களப்பு வாவிப் பிரதேசத்தில் சுற்றுலா திட்டங்களை செயற்படுத்துவதற்கான களப்பரிசீலனை..!!

மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தினால் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் வாவிப் பிரதேசத்தில் சுற்றுலா திட்டங்களை செயற்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட களப்பரிசீலனை  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் என்.நிரோசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் கே.சந்திரகாந்தன் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஆரம்பமான இந்நிகழ்வில் மட்டக்களப்பு நகரை அண்டிய வாவியிலும் நகரின் வௌிப்பிரதேச வாவியிலும் சூழல் பாதுகாப்புடன் சுற்றுலாவை ஏற்படுத்தும் வகையில் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் குறிப்பாக வாவிச்சூழலை பயன்படுத்தி மட்டக்களப்பு மக்களுக்கு நன்மை தரக்கூடியவாறு தொழில்களை ஏற்படுத்தி அதன் மூலம் மட்டக்களப்புக்கு வருமானத்தை பெறக்கூடிய வகையில் இந்த சுற்றுலா நடவடிக்கை அமையவுள்ளதாக மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் என்.நிரோசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது,சொறுவாமுனை, நரிப்புல் தோட்டம் உள்ளிட்ட சுற்றுலாவுக்கு பொருத்தமான இடங்கள் இயந்திரப்படகின் மூலம் சென்று பார்வையிடப்பட்டுள்ளது.

மீன்பிடிப்பதை தவிர வேறு எதையும் இந்த ஆற்றில் நாம் செய்வதில்லை. இதை சூழலை பாதுகாக்கும் வகையில் சுற்றுலா துறையை ஊக்குவிப்பதனூடாக எமது மக்களின் வாழ்வாதாரம் உயர்வடையும் என்பதுடன், எமது மாவட்டத்திற்கு வருமானத்தையும் பெற்றுக்கொடுக்கலாம் என இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.

Related posts