கதாநாயகனாக அறிமுகமாகும் முகின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!!

பிக்பொஸ் சீசன் 3 வெற்றியாளர் முகின் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. முகின் ராவ்,  அனுகீர்த்தி வாஸ் நடிப்பில் அஞ்சனா அலிகான் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு வெற்றி எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன்,  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவார் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த வாரம் முதல்…

மேலும்

ஜனநாயகமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய..!!

ஜனநாயகத்திற்குள் பிரச்சினைகள் இருந்தாலும் ஜனநாயகமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்புச் சட்டம் சிறந்த அரசியலமைப்புச் சட்டமாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனநாயக தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே தேசப்பிரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.…

மேலும்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் இருவர் குணமடைந்தனர்..!!

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 02 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்று உறுதியானவர்களில் 137 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்தோடு…

மேலும்

20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய குழுவை நியமித்தது சுதந்திரக் கட்சி..!!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. குறித்தக் குழு 10 பேரைக் கொண்டதெனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய குறித்த குழுவில், அமைச்சர். நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர். ரோஹன லக்ஷ்மன் பியதாச, அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் துமிந்த…

மேலும்

13வது திருத்தம்: பிரதமர் மோடியினால் அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படவில்லை- கெஹெலிய..!!

13வது திருத்தம் தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுப்படுத்துவதற்கான நிதியை பெறுவதாயின், 13ஆவது திருத்தத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய பிரதமரிடமிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன என செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையிலேயே கெஹெலிய ரம்புக்வெல…

மேலும்

மட்டு . வடமுனைக் காட்டில் முதியவரின் சடலம் கண்டெடுப்பு..!!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வடமுனைக் காட்டிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்ட சடலம்   வடமுனையில் வசிக்கும் வைரமுத்து நவரெத்தினம் (வயது 61) என்பவருடையது என உறவினர்கள்  அடையாளம் காட்டியுள்ளனர். கடந்த சனிக்கிழமையன்று வீட்டை விட்டு காட்டுப் பகுதிக்குச் சென்றவர் திரும்பி வராத நிலையில் திங்களன்று சடலமொன்று காட்டுப்…

மேலும்

20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து மேலும் இரு மனுத்தாக்கல்..!!

20 ஆவது திருத்த வரைபினை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க உட்பட மேலும் இரண்டு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 20 ஆவது திருத்த வரைபினை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றில் இதுவரை 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள்…

மேலும்

ஸ்பெயினில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புதிய கட்டுப்பாடுகள்..!!

ஸ்பெயின் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பிராந்திய சுகாதார அதிகாரிகள் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கடந்த வாரம் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி ஸ்பெயினில் 716,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தலைநகர் மட்ரிட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் என…

மேலும்

எஸ்.பி.பி.இன் மருத்துவக் கட்டண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சரண்..!!

கொலஞ்சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வெளியாகிய வதந்திகளுக்கு எஸ்.பி.பி.யின் மகன் சரண் விளக்கமளித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் திகதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, எஸ்.பி.பி.யின் சிகிச்சைக்கு எம்.ஜி.எம் மருத்துவமனை அதிகப்படியான பணம் அறவிட்டதாகவும் இதனைக்…

மேலும்

வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும் போராட்டத்தின்போது ஸ்டாலின் வலியுறுத்து..!!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை பா.ஜ.க. அரசு திரும்ப பெறவேண்டும் என காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டமூலங்களைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டமூலங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் அதற்கு துணை போகும் அ.தி.மு.க. அரசை…

மேலும்