அமெரிக்காவால் 150 பில்லியன் டொலர் இழப்பு- ஈரான்..!!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் ஈரானுக்கு 150 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹசன் ருஹானி தெரிவிக்கையில், “அணுவாயுத ஒப்பந்தத்தில் அமெரிக்கா விலகியதிலிருந்து சுமார் 150 பில்லியன் டொலர் வருடாந்த இழப்பு ஈரானுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், மருந்து மற்றும் உணவு இறக்குமதியையும் அமெரிக்கா தடுக்கிறது. ஈரானின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சரிவைச் சந்தித்துள்ளது.

அத்துடன், வேலையின்மையும் அதிகரித்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு யாரையாவது சபிக்க எண்ணினால் அது அமெரிக்காவாகத்தான் இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கொலைசெய்ய ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கத் தூதுவரைக் கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது என்றும், அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் தொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஆயிரம் மடங்கு பதில் தாக்குதல் அளிக்கப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts