புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் -ராகுல் காந்தி மீண்டும் தாக்கு..!!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும்அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டக்களத்தில் இறங்கி உள்ளன.

இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி மீண்டும் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குறைபாடு உள்ள ஜிஎஸ்டியானது குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்களை அழித்துவிட்டதாகவும், புதிய வேளாண் சட்டங்கள் நமது விவசாயிகளை அடிமைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts