ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்- 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் சிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் அடங்கிய கூட்டுப்படையினர் நேற்று மாலை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவலும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts