அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோரை கைது செய்ய நடவடிக்கை..!!

அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை இன்று முதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில்லறை விலைக்கு அதிகமாக சில வர்த்தகர்கள் அரிசியை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபை இதனை மேற்கொண்டுள்ளது. நுகர்வோர்…

மேலும்

யாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு..!!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நடவடிக்கை கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பருவகால மீனவர்களிடமிருந்தும் தென்னிலங்கை பிரதேசங்களில் இருந்தும் யாழ்ப்பாண மீனர்வர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட கடற்றொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாமல் இருந்த…

மேலும்

தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே- சசிகலா ரவிராஜ் அறிக்கை..!!

தியாகி திலீபனுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி தமிழர்களின் ஒற்றுமையே என மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்ஜின் பாரியார் சசிகலா ரவிராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், திலீபனின் அகிம்சைப் போராட்டத்தை சம்பந்தப்பட்டவர்கள் கண்டு கொள்ளவில்லையென்று ஆதங்கப்படும் நாம், அவருக்கு அஞ்சலி செய்தல் மட்டும் போதுமா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை)…

மேலும்

விஜயகாந்த் பூரண நலமுடன் உள்ளார் – தே.மு.தி.க..!!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக தலைமைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. அறிகுறிகள் இல்லாமலேயே விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்  நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பில் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ விஜயகாந்த் 6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்வது வழக்கம். வழக்கமான…

மேலும்

அவுஸ்ரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் திடீர் மரணம்..!!

அவுஸ்ரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தலைசிறந்த வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் (59 வயது) இன்று (வியாழக்கிழமை) மாரடைப்பால் மரணமடைந்தார். டீன் ஜோன்ஸ், மும்பையில் இருந்தவாறு ஐ.பி.எல். போட்டிகளை வர்ணனை செய்துவந்த நிலையில் மும்பையில் ஹோட்டல் லாபியில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த சக வர்ணனையாளரான பிரெட் லீ முதலுதவி அளித்தும் டீன் ஜோன்சைக்…

மேலும்

கஃபே ரணசிங்கம் திரைப்படத்தின் “பறவைகளா” பாடல்..!!

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள கஃபே ரணசிங்கம் திரைப்படத்தின் “பறவைகளா” என்ற பாடல் வெளியாகியுள்ளது. விருமாண்டி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கவிப் பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் டீசர் வெளியாகியுள்ள நிலையில், ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் டீசர் வெளியீடு..!!

நடிகை அக்ஷரா ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற திரைப்படத்தின் டீசர் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. ராஜா ராமமூர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல பாடகி உஷா உதூப் நடித்துள்ளார். முதல்முறையாகக் கதாநாயகி வேடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்

உப அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான 3 ஆம் தர மாணவன் மருத்துவமனையில் அனுமதி..!!

இப்பாகமுவ கல்விப் பணிமனையில் உள்ள ஒரு பாடசாலையில் கல்வி பயிலும் 3 ஆம் தர மாணவருக்கு அப்பாடசாலையின் உப அதிபரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவரின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று காலை மத விழாக்களில் கலந்துகொண்டிருந்தபோது நண்பனால் தனது மகன் தள்ளிவிடப்பட்டள்ளார். இதன்போது கீழே விழுந்த தனது மகனை பாடசாலையின் உப அதிபர் கடுமையாக தாக்கியுள்ளதாக…

மேலும்

நியூ டயமன்ட் கப்பல் உரிமையாளரால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள இடைக்கொடுப்பனவு..!!

தீ பரவலுக்கு உள்ளான நியூ டயமன்ட் கப்பல் மூலமாக இடைக் கொடுப்பனவாக கோரிய 340 மில்லியன் ரூபாவை கப்பலின் உரிமையாளர் இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கம்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 237 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.33 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதேபோன்று பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3…

மேலும்