மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகாது – லோகேஷ் கனகராஜ்..!!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாகாது என அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறி உள்ளார்.

கோவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக வாய்ப்பு இல்லை.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில்தான் வெளிவரும். திரையரங்குகள் திறக்க அரசு அனுமதி அளித்த பின்னர் திரைப்படம் வெளியாகும் திகதியை தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்யும்.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளதால் அதனை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts