அவுஸ்ரேலிய தீவான டாஸ்மேனியா கடற்கரையில் சிக்கித் தவிக்கும் 270 திமிங்கலங்களை காப்பாற்ற மீட்புப் படையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.
திமிங்கலங்களில் மூன்றில் ஒரு பகுதி ஏற்கனவே இறந்துவிட்ட அச்சத்திற்கு மத்தியில், மீட்புப்பணிகள் தொடருகின்றன. ஏற்கனவே 25 பைலட் திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளன.
திங்களன்று, டாஸ்மேனியாவின் கரடுமுரடான மற்றும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மேற்கு கடற்கரையில், மேக்வாரி துறைமுகத்தில் நீண்ட கால பைலட் திமிங்கலங்கள் கம்பிகளில் சிக்கிக்கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு திமிங்கலமும் 7 மீட்டர் நீளம் கொண்டதாகவும், 3 டன் எடை கொண்டதாகவும் இருந்ததாக மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
மேலும், டாஸ்மானியா கடற்கரையில் இதுபோன்று ஒதுங்குவது அசாதாரணமானது அல்ல. ஆனால் இந்த அளவில் ஒதுங்கியது எதிர்பார்க்காதது. கடந்த 10 ஆண்டுகளில் கரை ஒதுங்கியது கிடையாது என்று தெரிவித்தனர்.