வேல்ஸில் இரண்டு பகுதிகள் நெருக்கமாக கண்காணிக்கபடுகின்றன: முதலமைச்சர் தகவல்..!!

வேல்ஸில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மேலும் இரண்டு பகுதிகள் நெருக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

நோய்த்தொற்று வீதம் கடந்த வாரத்தில் 100,000 பேருக்கு 20இல் இருந்து 100,000க்கு 35ஆக உயர்ந்துள்ளது என்று முதல் அமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

நியூபோர்ட் மற்றும் மெர்திர் டைட்ஃபில் ஆகியவற்றில், கொரோனா வைரஸ் தொற்று வளரும் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது என முதலமைச்சர் மேலும் கூறினார்.

தற்போது, கெர்பில்லி கவுண்டி மற்றும் ரோண்ட்டா சைனான் டாஃப் (ஆர்.சி.டி) ஆகியவற்றில் வசிக்கும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

வேல்ஸ் பொது சுகாதார சபை வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களில், ஆர்.சி.டி.இல் (100,000க்கு 83.7 தொற்றுகள்) பதிவாகியுள்ளன. இது இப்போது கெயர்பில்லியை (73.5) முந்தியுள்ளது.

பிரித்தானியாவைப் பொறுத்தவரையில், கடந்த வாரம் ஒப்பிடக்கூடிய தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டபோது, கெர்பில்லி ஆறாவது கடினமான பாதிப்புக்குள்ளான பகுதி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆர்.சி.டி 13ஆவது இடத்திலும், நியூபோர்ட் 35ஆவது இடத்திலும், மெர்திர் டைட்ஃபில் 36ஆவது இடத்திலும் இருந்தன.

Related posts