வவுனியாவில் யானைகளால் வாழ்வாதார பயிர்கள் நாசம்..!!

வவுனியா புதிய வேலர் சின்னக்களம் கிராமத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பயன்தரு வாழ்வாதார பயிர்கள் நாசம் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிராமத்திற்குள் நேற்று இரவு 8 மணியளவில் புகுந்த யானை ஒன்றே இவ்வாறு பல வீடுகளிற்கும் சென்று அங்கு காணப்பட்ட பயிர்களை முறித்துள்ளதுடன் பொருட்கள் சிலவற்றையும் சேதப்படுத்தியுள்ளது.

இதேவேளை பப்பாசி, வாழை, தென்னை போன்ற பயிர்கள் பலவற்றை இழந்துள்ள கிராம மக்கள் தமது கிராமத்திற்கு இவ்வாறு தொடர்ச்சியாக யானை அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Related posts