பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து முக்கிய வீராங்கனை விலகல்..!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா விலகியுள்ளார்.

காயம் காரணமாகத் தன்னால் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், நவோமி ஒசாகா சம்பியன் பட்டம் வென்றமை நினைவுக்கூறத்தக்கது.

முன்னதாக கடந்த மே 24ஆம் திகதி முதல் ஜூன் 7ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்தத் தொடர் செப்டம்பர் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts