பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து முக்கிய வீராங்கனை விலகல்..!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து ஜப்பானின் முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா விலகியுள்ளார். காயம் காரணமாகத் தன்னால் பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், நவோமி ஒசாகா சம்பியன் பட்டம் வென்றமை நினைவுக்கூறத்தக்கது. முன்னதாக…

மேலும்

அ.தி.மு..க கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்..!!

அ.தி.மு..க கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். இது குறித்து ஜெயக்குமார் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க. கூட்டத்தில் காரமும் இல்லை, ரசமும் இல்லை. அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. காரசார விவாதம் நடைபெறவில்லை. கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக இருந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க வேண்டும். அதிமுக ஆலோசனை…

மேலும்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் காலமானார்..!!

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க் ( Ruth Bader Ginsburg) காலமானதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புற்றுநோயால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்த கின்ஸ்பர்க், நேற்று (வெள்ளிக்கிழமை) தனது 87ஆவது வயதில், வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். பெண்கள் உரிமைகளில் ஒரு சிறந்த சாதனையாளராக பார்க்கப்படும் கின்ஸ்பர்க், ஆண்டின் தொடக்கத்தில்,…

மேலும்

வவுனியாவில் யானைகளால் வாழ்வாதார பயிர்கள் நாசம்..!!

வவுனியா புதிய வேலர் சின்னக்களம் கிராமத்தில் யானைகளின் அட்டகாசத்தால் பயன்தரு வாழ்வாதார பயிர்கள் நாசம் செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கிராமத்திற்குள் நேற்று இரவு 8 மணியளவில் புகுந்த யானை ஒன்றே இவ்வாறு பல வீடுகளிற்கும் சென்று அங்கு காணப்பட்ட பயிர்களை முறித்துள்ளதுடன் பொருட்கள் சிலவற்றையும் சேதப்படுத்தியுள்ளது. இதேவேளை பப்பாசி, வாழை, தென்னை போன்ற பயிர்கள்…

மேலும்

வேல்ஸில் இரண்டு பகுதிகள் நெருக்கமாக கண்காணிக்கபடுகின்றன: முதலமைச்சர் தகவல்..!!

வேல்ஸில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மேலும் இரண்டு பகுதிகள் நெருக்கமான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நோய்த்தொற்று வீதம் கடந்த வாரத்தில் 100,000 பேருக்கு 20இல் இருந்து 100,000க்கு 35ஆக உயர்ந்துள்ளது என்று முதல் அமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். நியூபோர்ட் மற்றும் மெர்திர் டைட்ஃபில் ஆகியவற்றில், கொரோனா வைரஸ் தொற்று வளரும் நிலைமை உன்னிப்பாகக்…

மேலும்

குவாதமாலா ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று..!!

லத்தீன் அமெரிக்க நாடான குவாதமாலாவின் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டீ (Alejandro Giammattei) மற்றும் கலாசார அமைச்சர் லிடியட் சில்வானா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளது. தனக்கு, நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உள்ளூர் வானொலியான சோனோராவில் கியாமட்டீ…

மேலும்

பொதுச் சுகாதார நெறிமுறைகளை மீறும் மாணவர்களுக்கு தண்டனை..!!

பொதுச் சுகாதார நெறிமுறைகளை மீறும் மாணவர்களை தண்டிப்பதற்கான புதிய விதியை கொண்டுவருவதற்கு, குயின்ஸ் பல்கலைக்கழகம் பரிசீலித்து வருகிறது. பாடசாலையை சுற்றியுள்ள பகுதிகளில் கூட்டங்களை நடத்தும் மக்களுக்கு கிங்ஸ்டன் பொலிஸார் ஏராளமான அபராதம் விதித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அசாம்பாவிதத்தை ஏற்படுத்தும் விருந்துகளை ஏற்பாடு செய்பவர்களுக்கு அபராதம் 500 டொலரிலிருந்து 2000 டொலராக நகரம் உயர்த்தியுள்ளது.…

மேலும்

நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு: இருவர் உயிரிழப்பு, டசின் கணக்கானோர் காயம்..!!

நியூயோர்க்கின் ரொசெஸ்ரர் (Rochester) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது, 13 பேர்வரை காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு மக்கள் கூடியிருந்த பகுதியொன்றில் இடம்பெற்றுள்ள நிலையில், பாதிப்பு குறித்த முழுமையான தகவலை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும்

கேரள அரசுக்கு எதிராக 2 வழக்குகள் பதிவு..!!

தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கேரள அரசுக்கு எதிராக 2 வழக்குகளை சுங்கத்துறை பதிவு செய்துள்ளது. கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதகரம் வழியாக தங்கம் கடத்தியதாக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ, அமலாக்கத்துறை, சுங்கத்துறை…

மேலும்

அகில இலங்கை ரீதியாக வலைப்பந்தாட்ட தமிழ் மொழி நடுவர்களுக்கான செய்முறை பரீட்சை..!!

அகில இலங்கை ரீதியாக உள்ள அனைத்து தமிழ்மொழி வலைப்பந்தாட்ட  நடுவர்களுக்கான செய்முறை பரீட்சை இன்று(சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. வடமாகாண வலைப்பந்தாட்ட இணைப்பாளர் T.M தெய்வேந்திரன் தலைமையில் இவ் செய்முறைப்பரீட்சை இடம்பெற்றது. வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இவ் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக சகல மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 130 தமிழ்மொழி நடுவர்கள் கலந்துகொண்டனர்.…

மேலும்