தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்..!!

தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 3 இல் இருந்து ஐந்தாக அதிகரிக்குமாறு, ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளையும், அவதானிப்புகளையும் முன்வைப்பதற்காக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் குழு ஒன்றினை பிரதமர் நியமித்திருந்தார்.

குறித்த குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கையிலேயே மேற்படி பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2Shares

Related posts