இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 14 வெளிநாட்டு பிரஜைகள் கைது..!!

இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நைஜீரிய மற்றும் சீன பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் ஊடாக  இந்த குழுவினர் 60 மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி  மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு 101 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகம் மற்றும் தகவல்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ் மா அதிபர்   லால் செனவிரட்ன  தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டலாபச்சீட்டுக்கள் ஊடாக பரிசினை வென்றுள்ளதாகவும் தெரிவித்து  குறித்த 14 பேர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts