அங்கொட லொக்கா உயிரிழந்தமைக்கான காரணம் வௌியானது..!!

ஒழுங்கமைக்கப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த அங்கொட லொக்கா கோவையில் போலி பெயரில் தங்கி இருந்த நிலையில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

மாரடைப்பால் அவர் மரணம் அடைந்ததாக அங்கொட லொக்காவுடன் தங்கி இருந்த காதலி தான்சி கூறினார்.

கோவை அரசு வைத்தியசாலையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மதுரையில் அவரது உடல் எரிக்கப்பட்டிருந்தது.

அவர் கோவையில் தங்கி இருப்பதற்காக போலி ஆதார் அடையாள அட்டை எடுக்க உதவியதாக பெண் சட்டத்தரணி சிவகாமிசுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் மற்றும் காதலி தான்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் அங்கொட லொக்காவின் உடல் கோவை அரசு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடந்தபோது, அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட உடற்கூறுகள், சென்னையில் உள்ள மருத்துவ ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் உடற்கூறு அறிக்கையில் அங்கொட லொக்கா மாரடைப்பால் இறந்து இருப்பதாகவும், சந்தேக மரணம் இல்லை என்றும் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இறந்தவர் அங்கொட லொக்காதானா என்று டி.என்.ஏ. பரிசோதனைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts