20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்..!!

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடித்து ஜனநாகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில், நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சம்பிக்க ரணவக்க மேலும் கூறியுள்ளதாவது, “20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக, எதிர்வரும் 21 ஆம் திகதி கூடி ஐக்கிய மக்கள் சக்தி ஆராயவுள்ளது.

20ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிச்சயமாக நாம் தோற்கடித்து, மக்களுக்கு ஜனநாயகத்தையும் உரிமையையும் மீண்டும் நிலைநாட்டுவோம்.

நாடாளுமன்றுக்குக் கிடைத்த மக்கள் ஆணையை நாம் பாதுகாக்க வேண்டும். இதுதொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியினர் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகிறோம்.

எதிர்வரும் 21ஆம் திகதி எமது நாடாளுமன்றக்குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது, 20 தொடர்பாக தீவிரமாக ஆராய்து, எமது அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக இறுதித் தீர்மானத்தை எடுப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts