வடக்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞன் உயிரிழப்பு..!!

வடக்கு லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக, மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லிங்டனின் வடக்கு வீதியில் நேற்று (திங்கட்கிழமை) இந்த கத்திக்குத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உடனடியாக மருத்துவ சேவையினை அழைத்தனர்.

இதன்போது சம்பவ இடத்தில் இளைஞனுக்கு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த இளைஞனின் வயது, பெயர் மற்றும் கத்திக்குத்து இடம்பெற்றதற்கான காரணம் ஆகிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை மற்றும் பாதிக்கப்பட்டவரின் உறவினரை அடையாளம் காண அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

Related posts