அமெரிக்க ஒசாகா தரவரிசையில் முன்னேற்றம்..!!

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முடிவை தொடர்ந்து, புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி பெண்கள் பிரிவில், அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா ஆறு இடங்கள் ஏற்றம் கண்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி 8717 புள்ளிகளுடன் தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தை அலங்கரிக்கின்றார்.

தொடர்ந்து ரோமேனியாவின் சிமோனா ஹெலப், 6356 புள்ளிகளுடன் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.
செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஒரு இடம் சரிந்து 5205 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சோபியா கெனின் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 4700 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

உக்ரேனின் எலினா ஸ்வீடோலினா ஒரு இடம் பின்தள்ளப்பட்டு ஆறாவது இடத்தையும், கனடாவின் பியன்கா அன்ட்ரெஸ்கு ஒரு இடம் சரிந்து 4555 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும், நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் ஒரு இடம் சரிந்து 4335 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் சரிந்து 4080 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், பெல்ஜியத்தின் எலீஸ் மெர்டன்ஸ் இரண்டு இடங்கள் பின்தள்ளப்பட்டு 2350 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Related posts