NEET பற்றிய நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கிறதா…?

நீட் தேர்வால் தமிழகத்தில் என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு இந்த தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா NEET தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் சென்று தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற சூர்யாவின் வரிகளை தனது கடிதத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி A.B.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் எழுதியுள்ள கடிதத்தில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சூர்யாவின் இந்த கருத்தின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts