விஜய் பட நடிகரின் அழகான மகள் செய்த மாஸான சாதனை..!!

விஜய்க்கு தமிழ்நாட்டை போல பெரும் ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் மலையாள நாட்டிலும் உள்ளது பலரும் அறிந்த ஒன்றே. அங்குள்ள சினிமா நடிகர்கள், நடிகைகளும் விஜய்யுடன் படங்களில் நடித்துள்ளார்கள்,

அதில் ஒருவர் நடிகர் கிருஷ்ண குமார். விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்திருந்தவர் விக்ரம் நடித்த தெய்வ திருமகள், உதய நிதியுடன் மனிதன், ஜீவாவுடன் முகமூடி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

அவரின் மூத்த மகள் ஆஹானா மலையாளா சினிமா நடிகையாக உள்ளார். கடந்த 5 மாத காலமாக சினிமா முடங்கியிருந்த நிலையில் ஆஹானா தன்னுடைய 3 தங்கைகளுடன் இணைந்து யு டியூப் சானலில் கான்சப்ட் வீடியோ செய்து வெகு விரைவில் ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் பெற்று சில்வர் பட்டன் வாங்கியுள்ளாராம்.

ஏற்கனவே இவர்கள் சானல் ஓப்பன் செய்திருந்த நிலையில் செயல்படாதிருந்த அந்த சானலை தற்போது ஊரடங்கு காலத்தில் செயல்பட வைத்து சாதனை நிகழ்த்தியுள்ளதை பலரும் பாராட்டியுள்ளார்கள்.

Related posts