லடாக்கின் கிழக்கு எல்லையில் துருப்புகள் முன்நகர்தலை நிறுத்தியது சீனா!

லடாக்கின் கிழக்கு எல்லையில் கடந்த 4நாட்களாக துருப்புகள் முன்நகர்தலை சீனா நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து லடாக் பகுதியில் இருநாட்டு இராணுவ வீரர்களும் எந்த நகர்வும் இல்லாமல் இருப்பதாக இராணுவ  தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில தினங்களாக இரு நாட்டுப் படைவீரர்களும் 200 மீட்டர் தொலைவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளமையினால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம்  நிலவியது.

இந்நிலையில் இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடந்த 4 நாட்களாக எந்த நகர்வும் இல்லை எனவும் அவரவர் இருக்கும் நிலைகளில் நீடிப்பதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares

Related posts