மோரியா முகாமுக்கு பதிலாக லெஸ்போஸ் தீவில் நிரந்தர வரவேற்பு மையம்..!!

தீக்கிரையான மோரியா முகாமுக்கு பதிலாக லெஸ்போஸ் தீவில் குடியேறியவர்களுக்கும் அகதிகளுக்கும் ஒரு நிரந்தர வரவேற்பு மையத்தை கட்டப்போவதாக கிரேக்கம் தெரிவித்துள்ளது. நெரிசலான மோரியா முகாம் கடந்த வாரம் எரிந்ததால், 12,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு தங்குமிடம் அல்லது சரியான சுகாதாரம் இல்லாமல் போய்விட்டது. எவ்வாறாயினும், அதன் குடியிருப்பாளர்கள் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மீள்குடியேற்றப்படுவதற்கான வாய்ப்பை விரும்புகிறார்கள்…

மேலும்

ஈராக்கில் ஐ.எஸ் பகுதிகளில் தாக்குதல் நடத்திய றோயல் விமானப் படை.!

பிரித்தானியாவின் றோயல் விமானப் படைக்கு சொந்தமான விமானம், ஈராக்கில் ஐ.எஸ் பகுதிகளில் இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்களில், ஒன்று ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, நிலத்தடியில் கட்டமைத்த 85 மைல் குகை என்று நம்பப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில்…

மேலும்

கலையரசனை உயர்ஸ்தானிகர் சந்தித்து பேச்சு..!!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை இலங்கைக்கான  கனடா நாட்டு  உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்( High Commissioner to Canada in Sri Lanka David McKinnon)  சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பானது அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பகுதியில் உள்ள  நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோக பூர்வ…

மேலும்

விஜய் பட நடிகரின் அழகான மகள் செய்த மாஸான சாதனை..!!

விஜய்க்கு தமிழ்நாட்டை போல பெரும் ரசிகர்கள், ரசிகைகள் கூட்டம் மலையாள நாட்டிலும் உள்ளது பலரும் அறிந்த ஒன்றே. அங்குள்ள சினிமா நடிகர்கள், நடிகைகளும் விஜய்யுடன் படங்களில் நடித்துள்ளார்கள், அதில் ஒருவர் நடிகர் கிருஷ்ண குமார். விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்திருந்தவர் விக்ரம் நடித்த தெய்வ திருமகள், உதய நிதியுடன் மனிதன், ஜீவாவுடன் முகமூடி ஆகிய படங்களிலும்…

மேலும்

தீவிரவாதிகளைத் தேடி தீவிர தேடுதல் பணியில் இராணுவத்தினர்..!!

ஜம்முவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தேடும் பணியில் இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புல்வாமா- பரிகம் கிராமத்தில் ரோந்து சென்று கொண்டிருந்த பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை. எனினும் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் புல்வாமாவைச் சுற்றியுள்ள பகுதிகள்…

மேலும்

தொழில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு கடன் சலுகை..!!

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக  அமைச்சர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவற்றை பெற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்கு ஏற்படக் கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தன்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.…

மேலும்

சம்மாந்துறையில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி..!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட  நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கான 5 மாத கால  தலைமைத்துவ பயிற்சி இன்று  (திங்கட்கிழமை) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் ஹனீபா தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இப் பயிற்சி நெறியானது சம்மாந்துறை பிரதேச எல்லைக்குட்பட்ட பட்டதாரி…

மேலும்

இஸ்ரேலில் மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பு..!

கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் ஒரு புதிய தேசிய முடக்கநிலையை விதிக்க உள்ளது இஸ்ரேலில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருவதால், மூன்று வாரங்களுக்கு தேசிய முடக்கநிலை அறிவிப்பை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு தேசிய முடக்கநிலையை அமுல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே…

மேலும்

NEET பற்றிய நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கிறதா…?

நீட் தேர்வால் தமிழகத்தில் என்னென்ன பிரச்சனைகள் நடக்கிறது என்பதை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு இந்த தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா NEET தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதி வழங்கும்…

மேலும்

வவுனியா பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழுகூட்டம் ஆரம்பம்..!

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கினைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குலசிங்கம் திலீபன் தலைமையில் தற்போது ஆரம்பமாகி  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றய அமர்வில் பிரதேச செயலர் நா.கமலதாசன், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான்,வினோ நோகராதலிங்கம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச்சபை தலைவர் து.நடராயசிங்கம்,நகரசபை தலைவர் இ.கௌதமன், மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள்,…

மேலும்