மனித சமூகத்துக்கான சிறந்த ஆசான் விவேகானந்தர் மோடி..!!

மனித சமூகத்துக்கான சிறந்த ஆசானாக சுவாமி விவேகானந்தர் விளங்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளாார்.

அமெரிக்காவின் சிகாகோவில் கடந்த 1893-ஆம் ஆண்டு செப்டம்பா் 11 ஆம் திகதி சுவாமி விவேகானந்தர் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றினார்.

அதை நினைவுகூரும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் “இதே நாளில் சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் சிறப்பு வாய்ந்த உரையை நிகழ்த்தினார். அப்போது, இந்தியாவின் சிறப்பையும் மதிப்பையும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.

மனித சமூகத்துக்கு சுவாமி விவேகானந்தர் தொடர்ந்து பாடம் கற்பித்து வருகிறாார்” என குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நிகழ்த்திய உரையின் ஆவணத்தையும் பிரதமர் மோடி சுட்டுரைப் பதிவுடன் இணைத்துள்ளார்.

Related posts