அவரை போல் ஒருவரை விரும்புகிறேன் காதலில் விழுந்த விஜய், அஜித் பட வில்லன்..!!

விஜய், அஜித் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் வித்யூத் ஜாம்வால், அவரை போல் ஒருவரை விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.அவரை போல் ஒருவரை விரும்புகிறேன்... காதலில் விழுந்த விஜய், அஜித் பட வில்லன்வித்யூத் ஜாம்வால்விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜாம்வால், அஜித்குமாரின் பில்லா-2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார்.
இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிகை அடா சர்மா பற்றி கூறும்போது, “எனக்கு அவர் தோழி மட்டுமல்ல. நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள். அடா சர்மா போல் ஒருவரை விரும்புகிறேன்” என்று தெரிவித்து இருந்தார். 

அடா சர்மா - வித்யூத்

தற்போது அவர் அளித்துள்ள இன்னொரு பேட்டியில், “நான் காதலில் இருக்கிறேன். இப்போதுதான் அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து வித்யூத் ஜாம்வால் காதலிக்கும் பெண் நடிகை அடா சர்மாதான் என்றும், காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் இந்தி பட உலகில் பேசப்படுகிறது. 
அடா சர்மா தமிழில் பிரபுதேவாவுடன் சார்லி சாப்ளின்-2 படத்தில் நடித்துள்ளார். சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார்.

Related posts