அறிமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் ..!!

நடிகை மேகா ஆகாஷ் சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். மேகா ஆகாஷ், அசோக் செல்வனின் அடுத்த காமெடி டிராமா படத்தில் நாயகியாக இணைந்து நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் சுசீந்தரனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர் ஸ்வாதினி எழுதி இயக்குகிறார். கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் J.செல்வகுமார் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

அரசாங்கம் கொரோனாவுக்கு எதிரான பாதுக்காப்புடன், படப்பிடிப்பை துவங்குவதற்கான, தளர்வுகளை அறிவித்திருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை, அரசு கூறியுள்ள அனைத்து முன்னெச்செரிக்கைகளையும் கடைப்பிடித்து, வரும் அக்டோபரில் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். இப்படத்தின் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தரமான திரைக்கதை கொண்ட படத்தில், அதிலும் பெண் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொண்ட படத்தில் நடிப்பது என்பது வரமே என்று நடிகை மேகா ஆகாஷ் கூறியுள்ளார். அவ்வளவு எளிதில் இம்மாதிரியான வாய்ப்புகள் கிடைத்திராது. இயக்குநர் ஸ்வாதினி படத்தின் திரைக்கதையை கூறியபோது கதாப்பாத்திரத்தின் ஆத்மாவுக்குள் கரைந்து போனேன் என்றார்

Related posts