நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 984 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதிசெய்யப்பட்ட இருவரும் மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2819 ஆக அதிரித்துள்ள நிலையில் மேலும் 153 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts