நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு..!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரை செப்டம்பர் மாதம் 14 திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதிவரை நடத்துவதற்கு நடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

மழைக்காலக் கூட்டத்தொடரின்போது 18 கூட்டங்களை நடத்துவதற்கு அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே  தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படவுள்ளதாகவும்,  பார்வையாளர் மாடம் உள்ளிட்டவற்றிலும் நாளுமன்ற உறுப்பினர்களுக்கான இருக்கைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்களின்  வசதிக்காக பெரிய அளவிலான திரைகள்,  இருக்கைகளிடையே தடுப்புகள்,  நுண்கிருமிகளை அழிப்பதற்காக புறஊதாக் கதிர்களை வெளியிடும் கருவிகள் உள்ளிட்டவை இரு அவைகளிலும்  அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மக்களவை காலை நேரத்திலும்,  மாநிலங்களவை மாலை நேரத்திலும் செயற்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.0Shares

Related posts