காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று..!!

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டமொன்று இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியால்  நடத்தப்படவுள்ளது.

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் மகாராஷ்டிரா,  மேற்குவங்கம்,  ஜார்க்கண்ட்  ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய அரசு நீட் மற்றும் ஜே.இ.இ ஆகிய நுழைவுத் தேர்வுகளை நடத்தும் திகதிகளை அறிவித்துள்ள நிலையில் பல்வேறு மாநில அரசுகள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசிக்க சோனியா காந்தி திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts