ஒரேநாளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நேற்று ஒரேநாளில் 66 ஆயிரத்து 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 32 இலட்சத்து 31 ஆயிரத்து கடந்துள்ளதுடன், உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் 24 இலட்சத்து 64 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 7 இலட்சத்து 4 ஆயிரம் பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts