விவகாரங்களில் உதவுவதற்கு 4பேர் கொண்ட குழுவை நியமிக்க நடவடிக்கை..!!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே தொடர்ந்து இருப்பார் என அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கட்சி விவகாரங்களை கையாளும்போது அவருக்கு உதவுவதற்காக 4பேர் கொண்ட குழு ஏற்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் ஆலோசனையின் பேரில், இந்த குழு அமைக்கப்படுவதாகவும்  கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.

மேலும் கட்சி தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுப்பதில் இந்த குழுவிற்கு முழு அதிகாரம் இருக்கும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை கட்சியில் தேவையான மாற்றங்களை செய்ய சோனியா காந்திக்கு  முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts