நண்பனை இழந்ததால் நிறைய இழந்துவிட்டேன்- பிரதமர் மோடி கவலை..!!

நண்பனான முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை இழந்தமையினால் நிறைய இழந்து விட்டேன் என பிரதமர்  நரேந்திர மோடி கவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவரின் நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, தனது ருவிட்டர் பதிவில் இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.

மேலும், அருண் ஜெட்லி விடாமுயற்சியுடன் நாட்டுக்குத் தொண்டாற்றியவர். அறிவு, சட்ட நுணுக்கம் மற்றும் ஆளுமை ஆகியவற்றால் புகழ்பெற்றவர் எனவும் அதில் பதிவேற்றியுள்ளார்.

இதேவேளை, அருண் ஜெட்லி தொடர்பாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரை தொடர்பான காணொளியையும் பிரதமர் மோடி இணைத்துள்ளார்.

Related posts