கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் பாடும் நிலா!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகன் ராம் சரண் தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் தனது தந்தையின் உடல்நிலை தற்போது சீராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 5 ஆம் திகதி எம்.ஜி.எம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த அவர் காணொளியொன்றினையும் வெளியிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்திருந்தது. தொடர்ச்சியாக வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த தகவல்கள் வெளியாகிய நிலையில் சர்வதேச மருத்துவர்களின் உதவியுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts