இஸ்ரேலிய ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக லெபனானின் ஹெஸ்பொல்லா அறிவிப்பு..!!

இஸ்ரேலுக்கு அருகிலுள்ள தெற்கு எல்லைப் பகுதியில் லெபனானின் வான்வெளியை மீறிய இஸ்ரேலிய ட்ரோனை வீழ்த்தியதாக ஹெஸ்பொல்லா அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஆளில்லா விமானம் 22 ஆம் திகதி காலையில் லெபனானின் தெற்கே நபாட்டீவில் உள்ள அய்டா சாம்பல்-ஷாப் கிராமத்திற்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ஆளில்லா போர் விமானங்கள் மற்றும் போர் படகுகள் லெபனானின் எல்லைகளை அடிக்கடி மீறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் இது குறித்தும் ஐ.நா.வுக்கு லெபனான் அதிகாரிகள் முறைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.

இஸ்ரேல் கடந்த ஆண்டு லெபனானின் இறையாண்மையை 2,290 முறை மீறியது, 2020 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், இஸ்ரேல் சுமார் 374 தடவைகள், (எல்லைப்புறத்தில் 386, கடல் எல்லையில் 386 மற்றும் ஆகாய மார்க்கமாக 250 முறை) மீறியதாக கடந்த ஜூன் மாதம், அப்போதைய லெபனான் பிரதமர் ஹசன் டயப் கூறியிருந்தார்.

Related posts