இத்தாலியில் மீண்டும் உயரும் கொரோனா..!!

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை 947 புதிய தொற்று நோயாளர்கள் இத்தாலியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் 845 தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இத்தாலியில் கடந்த இரண்டு வாரங்களாக புதிய தொற்று நோயாளர்களின் தொகை அதிகரித்து வருகின்றமை மீண்டும் மற்றொரு தொற்று நோய் அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று நோய் தீவிரமடைந்த நிலையில் மே நடுப்பகுதி முதல் இத்தாலியில் கடுமையான சமூக முடக்கல் அமுல் செய்யப்பட்டது.

தொற்று நோய் காரணமாக இத்தாலியில் இதுவரை 35,427 போ் இறந்துள்ளனர். 257,000 -க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதை அடுத்து மீண்டும் அங்கு தொற்று நோய் அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் தினசரி தொற்று நோயாளர் தொகை 200,300,600 வரை அதிகரித்தை அடுத்து மீண்டும் அங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி சராசரி 900 என்ற அளவுக்கு புதிய தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தொற்று நோயைத் தொடர்ந்து மூடப்பட்டுள்ள பாடசாலைகளை செப்டம்பர் நடுப்பகுதியில் மீண்டும் திறப்பதற்கு இத்தாலி திட்டமிட்டுள்ள நிலையில் தற்போதைய நிலையில் அது பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீண்டும் தொற்று நோய் அதிகரித்துவரும் நிலையில் பாடசாலைகளைத் திறப்பது இரண்டாவது அலைக்கு காரணியாகக்கூடும் என அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் இப்போது கவலை வெளிளிட்டுள்ளன

Related posts