மூணாறு நிலச்சரிவில் சிக்கிய மேலும் மூவரின் உடல்கள் மீட்பு..!!

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து குறித்த நிலச்சரிவில் சிக்கி உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

மூணாறு ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 78 பேர் மண்ணுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இவர்களில் 16 பேர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய நிலையில் ஏனையவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இதன்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) 12 ஆவது நாளாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 3  பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts