தொண்டமனாறு பகுதியில் விபத்து..!!

தொண்டமனாறு மூன்று சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.45 மணியளவில் தொண்டமனாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது -50) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் விபத்துக்குள்ளானார்.

விபத்தில்படுகாயமடைந்த அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற  போதே  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts