ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரிய வழக்கின் தீர்ப்பு இன்று..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செவ்வாய்கிழமை) தீர்ப்பளிக்கவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

தமிழக அரசின்  உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் மனுத்தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவினை விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், மீண்டும் ஆலையை திறக்குமாறும் கோரி உத்தரவு பிறப்பித்தது.

பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மனுவொன்றை தாக்கல் செய்த நிலையில், தமிழக அரசின் மனுவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் மீண்டும் மனுத்தாக்கல் செய்தது.

இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க இடைக்காலத் தடை விதித்தது. அத்துடன்  வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts