ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது..!!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில்   மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதுடன், 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இது குறித்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என உயர்நீதிமன்றம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.

Related posts