புதுச்சேரியில் இன்று முழு ஊரடங்கு..!

புதுச்சேரி மாநிலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை காலை ஆறு மணிவரை தளர்வுகள் இல்லாத முழு பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மருந்தகங்கள், சமையல் எரிவாயு விநியோகம் மட்டும் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், கடைகள், உள்ளிட்ட வணிகவளாகங்கள் என அனைத்தையும் மூடுமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவை மீறி செயற்படுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மாநில எல்லைக்குள் மருத்துவ சேவைகள் தவிர வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts