பிரான்ஸில் குடும்ப வன்முறையினால் 173பேர் உயிரிழப்பு..!!

பிரான்ஸில் 2019ஆம் ஆண்டில், குடும்ப வன்முறைகளால் 173பேர் உயிரிழந்துள்ளதாக உட்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடும்ப வன்முறைகள், அதிகாரபூர்வமான தம்பதிகளிற்குள்; ஒன்றாக இணைந்து வாழும் தம்பதிகளிற்குள்; முன்னாள் கணவன் அல்லது மனைவிக்குள் என அனைத்து தரப்புகளிலும் நடந்துள்ளன.

இதில், கணவனால், காதலனால், முன்னாள் துணைவனால் மேற்கொள்ளப்பட்ட அதியுச்ச வன்முறைகளால், 146 பெண்கள் 2019ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மனைவியால், காதலியால், முன்னாள் துணைவியால் நடத்தப்பட்ட வன்முறைகளால் 27 ஆண்களும் 2019ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான விழிப்புணர்வுகள், கடுமையான சட்டங்கள், பொதுநலச் சங்கங்கள் என பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், குடும்ப வன்முறைகளின் எண்ணிக்கை குறையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts