கொழும்பில் வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு– கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தொழில் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் பெயர் விபரம் அரசாங்கத்தால் நேற்று  வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பெயர் விபரப்பட்டியலில், தமது பெயர்கள் உள்ளடக்கப்படவில்லையென தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts