எல்லைப் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பயணிக்க தயார்.. !!

எல்லைப் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராகவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது,

இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்  “ பிரதமர் மோடியின் உரையை நாங்கள் கவனித்தோம். நாம் இருவருமே நெருக்கமான அண்டை நாடுகள். நீண்டகால நலன் அடிப்படையில் இரு நாடுகளுமே பரஸ்பர மரியாதையையும், ஆதரவையும் கடைப்பிடிப்பதே சிறந்த வழி.

நமது பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும்  வேறுபாடுகளை களையவும் நடைமுறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும்  நீண்டகால அடிப்படையில் இருதரப்பு உறவை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியாவின் சுதந்திரத்தினத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில், “ பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லை வரை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மையில் குறிவைப்போருக்கு  அவர்களுக்கு புரியும் மொழியிலேயே நமது பாதுகாப்பு படையினர் பதில் அளித்துள்ளனர்.

இந்தியாவின் ஒருமைப்பாடே நமக்கு உச்சபட்சமாக முக்கியம். நம்மால் என்ன செய்ய முடியும்இ நமது ராணுவ வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை லடாக்கில் அனைவருமே பார்த்துவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts