இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு குறித்த அறிவிப்பு..!!

இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு அடுத்த மாத தொடக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  குறித்த மாநாடு ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது இராணுவ தளவாடங்கள் மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் ஆகிய விடயங்கள் குறித்த முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை   ஜப்பானிய நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுகளை இந்தியாவில் அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts