வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 212பேர் தற்போது நாடு முழுவதும் உள்ள ஐந்து வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,893 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 102 நபர்கள் கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையத்திலும், 62 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், 18பேர் மினுவாங்கொட ஆதார வைத்தியசாலையிலும், 17பேர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையிலும், 10பேர் இரனவில வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் குணமடைந்துள்ளமையினால், குணடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2,670 ஆக காணப்படுகிறது.

அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 55 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts