பிரான்ஸில் ஒரேநாளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் ஒரேநாளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 3,015பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் இதுவரை மொத்தமாக இரண்டு இலட்சத்து 18ஆயிரத்து 536பேர் பாதிக்கபட்டுள்ளனர். அத்துடன் மொத்தமாக 30ஆயிரத்து 410பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது வரை ஒரு இலட்சத்து நான்காயிரத்து 278பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 367பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட, 83ஆயிரத்து 848பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts