நாடாளுமன்றத்திற்கு செல்லும் உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாடாளுமன்றத்திற்கு செல்லும் உறுப்பினர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்கும்போது அமைச்சர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என தலைமை சார்ஜென்ட்-அட்-ஆர்ம்ஸ் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts